இலங்கையின் எந்தவொரு அரசாங்கத்தையும் ஏற்க முடியாது!! பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு!

பிரித்தானியா, நாடுகளின் அரசினையே அங்கீகரிப்பதாகவும் அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என ஆசிய பசுபிக் பிராந்தியங்கள் தொடர்பான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மார்க் பீல்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரம சிங்கவையா அல்லது மஹிந்த ராஜபக்ஸவையா பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரிக்கின்றது என அந்த நாட்டின் நிழல் வௌியுறவுத்துறை செயலாளர் எமிலி தொன்பெர்ரி கேள்வியெழுப்பினார். இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு ரீதியில் சட்டம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம். அத்துடன் நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டி மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தரப்பத்தை அளிக்க வேண்டும் என இலங்கையின் ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஆசிய பசுபிக் பிராந்தியங்கள் தொடர்பான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் கூறியுள்ளார்.