கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கூட்டுமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பி.ஷினி. அவர் சமீபத்தில் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் திடுக்கிட செய்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் கழிவறையிலிருந்து வரும் துர்நாற்றத்தாலும், கொசுக்களாலும் எனது குழந்தை அடிக்கடி நோய் வாய்ப்படுகிறது.
இதுகுறித்து சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து அறிந்த பள்ளி தாளாளர் காவல் நிலையத்தில் என்கணவர் மீது பொய்யான புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் வந்துவிசாரித்து விட்டு பள்ளி நிர்வாகத்திடம் கழிப்பறையை அகற்றுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் கழிப்பறையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும்பள்ளி தாளாளர் எனது கணவர் மீதுபொய்யான புகார் அளித்ததன் பேரில்காவல்துறையினர் அவரை அழைத்து சென்றனர்.
ஆனால் அவரை எங்குகொண்டு சென்றனர் என தெரியவில்லை. மேலும் பள்ளி நிர்வாகத்தினர் அடிக்கடி என் வீட்டில் வந்து கொன்று விடுவோம் எனக்கூறி என்னையும் என் குழந்தையையும் மிரட்டுகின்றனர்.
இரவு நேரங்களில் மர்ம நபர்கள் என்வீட்டின் மீது கல் எறிகின்றனர். இதனால்நாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
எனவே காவல்துறையினரை அழைத்து எனது கணவரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், எங்களை தொடர்ந்து மிரட்டி வரும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் எங்களுக்கு தற்கொலை செய்து கொள்வதைதவிர வேறு வழியில்லை’ என்று கண்ணீர் மல்க கதறியபடி தெரிவித்துள்ளார்.