அரசியலில் பரபரப்பு! ஸ்டாலின் திடீர் சந்திப்பு!!

தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் ஆவார். இவர் வயது முதிர்வு காரணத்தாலும், உடல்நிலை கோளாறு காரணத்தாலும் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இவர் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை விட வயதில் மூத்தவர் ஆவார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் காய்ச்சல் காரணமாக அன்பழகன் தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, உடல் நலத்தில் முன்னேற்றம் கண்ட பின்னர் அன்பழகன் வீடு திரும்பினார்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்தில் திமுக பொதுச்செயலர் அன்பழகனுடன், மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பேராசிரியரின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.