அமித் ஷா, மோடி! வெளியான பரபரப்பு தகவல்!

அடுத்த வருடம் துவக்கத்தில் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர, சில மாநில கட்சிகளை ஒன்றாக இணைத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவாக்குவதற்காக சந்திரபாபு நாயுடு, மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தலைமையில் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு, தலைவர்களின் பிரசார யுக்தி உள்ளிட்டவை தொடர்பாக நடக்கும் இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.