இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மே.இ. தீவுகள் அணி ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில் 2-0 எனவும். ஒருநாள் போட்டியில் 3-1 எனவும் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
டி20 போட்டியில் உலக சாம்பியனான மே.இ. தீவுகள் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி௨௦ ஆட்டத்தில் இரண்டில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்று டி20 தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
இந்த நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் தொடங்கிய கடைசி டி20 கிரிக்கெட் போட்டியாவது வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லுமா என்ற நிலையில், டாஸ் வென்ற அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அந்த அணியின் ஹோப் மற்றும் ஹெட்மயர் வழக்கம் போல் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மைதானத்தில் இருந்த ரசிகர்களை வானத்தை பார்த்து உக்கார வைத்தனர். அதுவும் ஹோப் ஆரம்ப முதலே பேட்டை தூக்கி., தூக்கி., ரன் குவித்தார்.
ஹோப் 24 ரன்கள், ஹெட்மயர் 26 ரன்கள், பிரவோ 43 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரான் 53 ரன்களை குவித்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு, 181 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, இந்திய அணி 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித்-தவான் ஜோடி தங்களது ஆடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆட்டத்தின் 3 வது ஓவரில் ரோஹித் அவுட் ஆனதும் சென்னை ரசிகர்களுக்கு பக்கென்று ஆனது. அனால் மறுமுனையில் நான் இருக்கேன் என்று தவான் வெ.இண்டீஸ் அணி பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
அவருக்கு போட்டியா மறுமுனையில் ஆடிய ரிஷப் பந்த் பந்துகளை தெறிக்க விட்டார். ஆட்டத்தின் 12 வது ஓவரிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டியது. 13 வது ஓவரின் இறுதி பந்தை ரிஷப் பந்த் எதிர்கொள்ளும் போது. ஒரே கையில் மட்டையை சுழற்றி ஓங்கி அடித்த பந்து மைதானத்தின் மேற்கூரையை தாண்டி 6 ரன்களை பெற்றது.
தற்போது வரை இந்திய அணி 15 ஓவர்களில், 2 விக்கெட் இழப்பிற்கு, 139 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.