கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள குளத்துப்பாளையத்தை சார்ந்தவர் சத்தியப்பிரியா (20). இவர் கோயம்புத்தூரில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று பணியை முடித்துவிட்டு களைப்பாக வீட்டிற்கு வந்துள்ளார்., அப்போது அவரின் தாய் வீட்டில் உள்ள வேலைகளுக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனை மறுத்த ப்ரியாவை தாய் கண்டிக்கவே., கடும் மனவேதனையில் இருந்துள்ளார்.
இதனால் வீட்டின் கதவை அடைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் கதவை அடைத்து தூக்கிடுவதை கண்ட தயார் சத்தமிடவே., அக்கம்பக்கத்தினர் பதறியபடி கூடினர்.
கதவை உடைத்து வீட்டின் உள்ளே செல்வதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கவே., காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சத்தியப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.