2 மாத கர்ப்பிணியாக மாறியபோது தெரியவந்த உண்மை.!! கண்ணை மறைத்த காதல் வலை.!!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள பொம்மநாயக்கன்பட்டியை சார்ந்தவர் முத்துராஜ். இவரின் மகன் சவுந்தர்பாண்டி (27). இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் கணபதியார்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து சென்ற 3 வருடங்களாக தங்கி வந்துள்ளார்.

பல்லடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் துணி தைப்பவராக பணியாற்றி வருகிறார். அப்போது அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய 16 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது காதலாக மாறவே., இவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்., அந்த பெண்ணிடம் திருமண ஆசை காட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அதற்கு பின்னர் ஊருக்கு சென்று வருவதாக அந்த பெண்ணிடம் கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

ஊருக்கு சென்ற இவர் இரண்டு மாதங்களாக திரும்பி வராத நிலையில்., அந்த பெண் வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் செய்த சோதனையில்., அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து., அந்த பெண்ணிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது நடந்ததை அந்த பெண் கூறவே., அதனை கேட்டு அதிர்ச்சியடைந்து சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

அப்போது அவருக்கு சமீபத்தில் அவர் உறவினர் பெண்ணுடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. மேலும் பெண்ணை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.