வவுனியா தாண்டிக்குளத்தில் தொடருந்தில் இருந்து வீழந்து வைத்தியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தொடருந்து தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தில் நிறுத்தியவுடன் முல்லைத்தீவை சேர்ந்த வைத்தியர் ஒருவர் இறங்க முற்பட்டுள்ளார்.
எனினும் புகையிரத நிலையத்தின் தளம் குறித்த பகுதி வரைக்கும் நீள்மானதாக இன்மையால் அவர் திடீரென பள்ளமான பகுதியில் வீழ்ந்துள்ளார்.
இதன் காரணமாக காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் குறித்த வைத்தியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.