மகளுக்கு புற்றுநோய் : பிரபல நடிகையின் நெஞ்சைப் பிசையும் அனுபவம்!

விமர்சனங்களை முகம் பார்காமல் முன்வைப்பவர் நடிகை கஸ்தூரி. இதனால் பலமுறை சிக்கலிலும் சிக்கியுள்ளார்.

நடிகை கஸ்தூரியின் வாழ்க்கையில் மிகவும் துயரம் நிறைந்த தருணம் எதுவென குறிப்பிட்ட அவர், கண்ணீருடன் தனது மகள் பற்றி முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

தமது மகளுக்கு பசியே இல்லை என அறிந்து, அவளையும் அழைத்து நண்பரான மருத்துவர் ஒருவரை அணுகியுள்ளார் நடிகை கஸ்தூரி.

ஆனால் மருத்துவர் தமது சந்தேகத்தை தெரிவித்ததுடன், முழு பரிசோதனைக்கும் உட்படுத்தினார். அதில் தமது மகளுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது.

ஒரு தாயாரான தமக்கு அதை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை எனவும், மருத்துவத்திற்கும் மருத்துவருக்கும் தவறு நேர்ந்துள்ளதாகவும் தாம் நம்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பல மருத்துவர்களையும் சந்தித்து ஆலோசனை தேடியதாகவும், இறுதியில் ஸ்டெம் செல் மற்றுச்சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆனால் அந்த சிகிச்சையிலும் 50 சதவிகிதமே வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலால் மேலும் நிலைகுலைந்ததாக கூறும் கஸ்தூரி, கணவர் மருத்துவர் என்பதால், புற்றுநோய் சிகிச்சையுடன் ஆயுர்வேத சிகிச்சைக்கும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

கீமோதெரபியும் தலைமுடியெல்லாம் உதிர்ந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த மகளை பார்க்கவே நெஞ்சு பதறியது.

புற்றுநோய் மருத்துவமனையில் மரணத்துடன் போராடும் சிறார்களை கண்டது தொடங்கி நான் எனது நிலையை எண்ணி குறை கூறும் மன நிலையை மாற்றினேன் என கூறும் கஸ்தூரி,

இரண்டரை ஆண்டு கால தொடர் சிகிச்சை, 5 ஆண்டு கால கவனிப்பு என முடிந்த பின்னர், மகளின் நோய் முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தபோது மீண்டும் பிறந்ததாகவே கருதினோம் என்றார்.

தற்போது ஏழாம் வகுப்பு பயின்றுவரும் மகளுக்கு நாட்டியத்தில் ஈடுபாடு இருப்பதாகவும், எந்த பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் துணிவை அவள் தமக்கு கற்றுத்தந்ததாகவும் கஸ்தூரி மனோதிடத்துடன் பதிவு செய்துள்ளார்.