பிரித்தானியாவில் பார்னெட் மருத்துவமனையில் குடியிருக்கும் தாய் மற்றும் மகளால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுக்கை வசதி இன்றி பரிதவித்து வருகின்றனர்.
வடக்கு லண்டனில் உள்ள கிரிம்ஸ்பி பகுதியில் அரசு குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்தவர்கள் Ruth Kidane(21) மற்றும் அவரது தாயார் Mimi Tebeje(50).
இந்த நிலையில் கடந்த ஆண்டு யூலை மாதம் ஊனமுற்றவரான ரூத் கிடேன் வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அதே மருத்துவமனையில் உள்ள பொது வார்டில் அவரது தாயாரும் தங்கத் துவங்கியுள்ளார்.
இதனிடையே ரூத் கிடேனின் நோய் குணமடைந்ததாகவும், அவர் வீட்டுக்கு செல்லலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களின் கவுன்ஸில் குடியிருப்பை வேறொரு நபருக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டதால் இவர்களுக்கு வேறு வீடு அமைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதுவரையில் கவுன்சில் நிர்வாகிகளால் இவர்களுக்கு என குடியிருப்பு ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 15 மாதங்களாக மருத்துவமனையில் தாயாரும் மகளும் குடியிருந்து வருவதால், நோயாளிகளுக்கு இவர்களின் படுக்கையை வழங்க முடியாமல் உள்ளது.
இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுக்கை இன்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி பொதுமக்களின் வரிப்பணம் சுமார் 150,000 பவுண்டுகள் இந்த விவகாரத்தில் விரையமாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.