தேடலில்’ தொடங்கி காதலில் இணைந்த ஜோடி!

‘வசந்தம்’ உள்ளூர் தமிழ் தொலைக்காட்சி ஒளிவழியில் அண்மையில் முடிவடைந்த ‘கலாபக் காதலா’ எனும் உறவுகளை மையமாகக் கொண்ட நாடகத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் த.சூரியவேலன். இவரின் நிஜமான காதல் கதையோ 2016 ஆம் ஆண்டின் ‘தேடல்’ எனும் வசந்தம் ஒளிவழியின் வருங்கால நடிகர் களை அடையாளம் காணும் நடிப்புத் திறன் போட்டியில் தொடங்கியது. அங்குதான் அவர் சக நாடகக் கலைஞரான அ.ரூபினியை முதன் முதலாகச் சந்தித்தார்.

“‘வெற்றி’ நாடகத் தொடரி லிருந்து இவரைப் பார்த்து வருகிறேன். ஆனால் தேடல் நிகழ்ச்சியில் ஒருமுறை அவர் சிறப்பு தோற்றத்துடன் வருகை புரிந்திருந்தபோது எல்லோரிடமும் அதிகம் பேசினார். ஆனால் என்னிடம் இவர் அவ்வளவாக பேசவில்லை,” என்று தங்களது முதல் சந்திப்பை ரூபினி முகம் மலர நினைவுகூர்ந்தார். அதில் ஒரு கட்டத்தில் அவர்கள் இரு வரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ‘தேடல்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, ரூபினி ‘அலைபாயுதே’, ‘யார்-?’ என்ற நாடகத் தொடர்களில் புதுவரவாக வந்து பல உள்ளூர் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.