ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த வாரம் முதல் மாயமாகி விட்டதாக, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் காதலன் மற்றும் அவனுடனுடைய நண்பர்கள் அப்பகுதியில் சுற்றி திரிந்ததாக தெரியவந்தது.
அதனையடுத்து அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக காதலனிடம் கூறியுள்ளார்.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்து, பயந்து போன அந்த சிறுவன், சிறுமிக்கு கர்ப்பம் கலைக்கும் மாத்திரைகள் கொடுத்துள்ளான். ஆனால் அதனை சிறுமி சாப்பிடுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறாள்.
இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என நினைத்த சிறுவன், கடந்த 7ஆம் தேதியன்று ஆள் நடமாட்டம் இல்லாத பள்ளி மைதானத்திற்கு சிறுமியை அழைத்துச்சென்று, ஒரு இரும்பு கம்பி மூலம் சிறுமியின் தலையில் தாக்கியுள்ளான்.
மயங்கி கீழே விழுந்த சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ளதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.