காதலுக்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர், காதலனின் கண்முன்னே உயிரைவிட்ட காதலி!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாணவி பார்கவி. இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

பார்கவியும், அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விஷயத்தை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டு, பார்கவியின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை பார்கவியை, ராஜதுரை தனது மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அரசு கல்லூரிக்கு அழைத்து வந்தார்.

மீண்டும், தேர்வு முடிந்ததும் ராஜதுரை, பார்கவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்று, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், பேருந்தின் பின்சக்கரம் பார்கவியின் தலையில் ஏறி, பார்கவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ராஜதுரை காயங்களுடன் உயிர் தப்பினார். தான் கண் முன்னே காதலிக்கு நேர்ந்த கொடுமையால் கதறி அழுதுள்ளார் ராஜதுரை.

பின்னர் காயமடைந்த ராஜதுரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். காவல்துறையினர் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.