கஜா புயல் அதி தீவிர புயலாக மாறுகிறது!

அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக கஜா வலுவடையும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று காலை புயலாக மாறியது. வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது வர்க்குகிற15-ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும். .

இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ தொலைவில் ‘கஜா’ புயல் மையம் கொண்டுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். 12 கிமீ வேகத்தில் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

இந்நிலையில், கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும், வரும் 15ஆம் தேதி சென்னை-நாகை இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே-வடகிழக்கே 750 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது; அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக கஜா வலுவடையும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.