காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி? வெளியான தகவல்கள்

தருமபுரி மாவட்டத்தில் மாணவி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி அருகில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போதுதான் வாலிபர்கள் ரமேஷ், சதீஷ் இருவரும் பின் தொடர்ந்து சென்று இப்படி ஒரு செயலை நடத்தியுள்ளனர்.

பின்னர் உயிரை கையில் பிடித்தபடி அங்கிருந்து சவுமியா வீட்டுக்கு ஓடி வந்தார். இந்த நேரத்தில் அவரது தாய் – தந்தை இருவருமே வீட்டில் இல்லை. மாலையில் அவர்கள் வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி சவுமியா கதறி அழுதபடியே கூறியுள்ளார்.

அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் திடீரென இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தருமபுரியில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று சவுமியா பொலிசில் அளித்துள்ள புகாரில் ,

நான் 10-ம் வகுப்பு வரை சிட்லிங் கிராமத்தில் படித்து விட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் படித்தேன். இந்தாண்டு அதே பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பிரிவில் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தேன். 3-ந் தேதியன்று தீபாவளி விடுமுறைக்காக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்தேன்.

5-ந்தேதி பகல் 2 மணியளவில் என் தாய், தந்தையர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் நான் மட்டும் அங்குள்ள காட்டுக்கு மலம் கழிக்க சென்றேன்.

அப்போது எங்கள் ஊரை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் சதீஷ், மற்றும் அவருடைய நண்பர் பெருமாள் மகன் ரமேஷ் என்பவரும் பின் தொடர்ந்தனர்.

நான் காட்டுப்பகுதியில் செடி மறைவில் மலம் கழிக்க முற்பட்ட போது சதீஷ் என் பின்னால் வந்து அவன் கையை வைத்து என் வாயை பொத்தி அவன் ஆடையை அவிழ்த்து என்னை தள்ளி கெடுக்க முயன்றான்.

அப்போது ரமேஷ் என்னை பிடித்துக் கொண்டு நான் திமிராத படி சதீசுக்கு உதவி செய்தான். நான் சுதாரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். விடுடா, விடுடா என சொல்லி அவனிடமிருந்து திமிறி வீட்டு பக்கம் ஓடி வந்து விட்டேன். வந்த களைப்பால் படுத்து மயங்கி விட்டேன்.

2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.