திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒன்றரை வருடத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள அழகுபட்டியை சேர்ந்தவர் சரவணன் – பழனியம்மாள் (வயது 23) தம்பதியினர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமனம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு பிரவீன்யா என்ற 9 மாத குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் மதியம் மாமியார் செந்தாமரையிடம் மகளை ஒப்படைத்துவிட்டு, தம்பதியினர் இருவரும் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பியதும், உறங்கியுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு விழித்து பார்த்த போது, பழனியம்மாள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் உடனடியாக மாமியார் செந்தாமரையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டி நடத்திய தேடுதல் வேட்டையில் பழனியம்மாள் எழுதிய டைரி சிக்கியது. அதில், நான் உன்னை விரும்புகிறேன். நான் உன்னை நம்பி திருமணம் செய்து கொண்டேன். ஏன் என்னை வெறுக்கிறாய்? என்று தனது கணவரை பற்றிய வாசகங்கள் இதன்பெற்றிருந்தது. இதனடிப்படையில் தற்போது கணவர் சரவணனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.