ராஜஸ்தான் மாநிலத்தில் இருவேறு இடங்களில் 2 காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் புறவெளிப்பகுதி அருகே, மரத்தில் ஒரே கயிற்றில் இரண்டு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில், சுஜா பில் (18), ஜக்திஷ் பில் (21) என்ற காதல் ஜோடி சனிக்கிழமை காலை முதல் வீட்டில் இருந்து மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதே போல பாலோடரா பகுதியில் 25 வயதான சுமேர் மற்றும் 22 வயதான உஷா என்ற காதல் ஜோடி ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமைமுதலே வீட்டிலிருந்து மாயமாகிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவேறு இடங்களில் நடைபெற்றுள்ள தற்கொலை சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்