இறுதி சடங்கில் எழுந்து உக்கார்ந்த பிணம்! அலறி அடித்து ஓடிய கிராம மக்கள்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த முதியவர் இறுதிச்சடங்கில் போது, திடீரென உயிருடன் எழுந்துள்ள சம்பவம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராம். வயதான முதியவரான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

கடந்த 6 ஆம் தேதி படுக்கையில் இருந்து எழாமல் நீண்ட நேரம் உறங்கி கொண்டிருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தார். மருத்துவரை அழைத்துவந்து பரிசோதித்து பார்த்து உள்ளனர்.

அப்போது, ராம் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரியப்படுத்தியுள்ளார். செய்தி அறிந்த அவரின் உறவினர்கள் அனைவரும் ராமின் இறுதி சடங்கிற்கு வந்து சேந்தனார். ஊரும் ஒன்று கூடியது.

பூசாரியும், இறுதிச்சடங்கிற்கான வேலைகளை தொடங்கி, ராமின் உடலை கழுவ, அவருடைய மார்பு பகுதியில் குளிர்ச்சியான நீரை ஊற்றிய அடுத்த நொடி திடீரென ராம் கண்விழுத்து எழுந்து உக்கார்ந்துள்ளார்.

இதனை பார்த்த பூசாரி மற்றும் உறவினர்கள் பயத்தில் தலை தெறிக்க ஓடியுள்ளார். பின்னர் தான் தெரியவந்துள்ளது, ராம் நீண்ட நேரமாக உறங்கிக்கொண்டிருந்தை, அவர் இறந்து விட்டதாக எண்ணி குடும்பத்தார் மருத்துவரை அழைக்க, அந்த மருத்துவர் தவறான செய்தியை கூறவே இந்த சம்பவம் நடந்துள்ளது.

சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க., ”தூங்கும் போது கூட, காலை அசைத்து கொண்டே தூங்கணும் என்று”