கஜா தாக்கபோவது யாரை! எப்போது?! வெளியானது அதிகாரபூர்வ தகவல்!

கஜா புயல் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர ( கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா ) பகுதிகளில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் நவம்பர் 14 & 15 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் 15ம் தேதி நாகை – சென்னை இடையே முற்பகலில் கரையை கடக்கக்கூடும் எனவும், கரையை கடக்கும் வேளையில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 14-ம் தேதி இரவு முதலே மழை பெய்ய துவங்கும் எனவும், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால்,கடலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் அதிகபட்ச கற்று அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனபதால் ஒரு மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.