மகர ராசியில் கேதுவுடன் சஞ்சாரம் செய்து வந்த செவ்வாய் பகவான் நவம்பர் 6ஆம் தேதி முதல் கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த செவ்வாய் பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை என்றும் பார்க்கலாம்.
மேஷம் :
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தனவரவு மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.
ரிஷபம் :
உங்கள் ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் பணியில் கவனம் தேவை. தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை மேம்படும். வரவுக்கேற்ற செலவு உண்டாகும்.
மிதுனம் :
உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகனப் பயணங்களில் கவனம் தேவை. வீண் செலவுகளை தவிர்க்கவும்.
கடகம் :
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தேவையற்ற கோபமும், எரிச்சலும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் உண்டாகும்.
சிம்மம் :
செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
கன்னி :
உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் பதவி உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம் :
உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். விரயச் செலவுகள் உண்டாகும். வழக்குகளில் கவனம் தேவை. பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும்.
விருச்சகம் :
உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும். வீடு மற்றும் நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உடல்நலம் பாதிக்கப்படும். வீண் கவலைகள் தோன்றும்.
தனுசு :
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். தனவரவு மேம்படும். வீடு, வாகனம் மற்றும் நிலம் வாங்க ஏற்ற காலம் இது.
மகரம் :
இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
கும்பம் :
உங்கள் ராசியிலேயே செவ்வாய் பகவான் அமர்ந்திருக்கிறார். பகையாளி சனியின் வீட்டில் செவ்வாய் அமர்வது சிறப்பானதல்ல. எனவே, எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
மீனம் :
விரய ஸ்தானமான 12வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் உடல்நலப் பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.