உல்லாசமாக இருக்கும்போது உயிரைவிட்ட பெண் மரணத்தில் மர்மம்!. ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மாதர் சங்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குலமங்கலத்தை சேர்ந்த 19 வயதான கஸ்தூரி என்ற பெண்ணும், ஆலங்குடி அருகே அதிரான்விடுதியை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநரான நாகராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி கஸ்தூரி காணவில்லை என கஸ்தூரியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், நாகராஜன் அந்த பெண்ணுடன் சென்றதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நாகராஜனை தேடி வந்த காவல்துறையினர் சென்னையில் தலைமறைவாக இருந்த அவரை பிடித்து அவரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் நெருக்கமாக இருந்தபோது நெஞ்சுவலி காரணமாக இளம்பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பயத்தில், திடீரென இறந்தவரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணும், நாகராஜனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் கஸ்தூரியின் மரணத்தில் பலருக்கு தொடர்புள்ளது என போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கஸ்தூரி கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும், கஸ்தூரி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கீரமங்கலத்தில் இந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.