நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது, உச்ச நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ள குறித்த உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டிய கடப்பாடு உள்ளது என இலங்கையில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின், நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இன்றைய தினம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
இந்த இடைக்கால தடையுத்தரவை அடுத்து எவ்வாறான சட்ட முறைகள் பின்பற்ற இருக்கின்றன, நாடாளுமன்றம் கூடுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் சட்டத்தரணி மங்களேஸ்வரி இதன்போது தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,