நடிகர்களை அடுத்து., சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பறந்த தமிழக அமைச்சர்கள்.!

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவுக்கு பின், தமிழகத்தின் இயற்கை முறை விவசாயத்தை காக்க அவரின் அறிவுரை கேட்டு வளர்ந்த பலரும் முன்பை விட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அப்படி இந்த மண்ணையும், தமிழ் பராரம்பரியமான நெல் விதைகளையும் காத்துவரும் அய்யா ‘நெல் ஜெயராம்’ அவர்களும் ஒருவர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரெங்கம் கிராமத்தில் பிறந்தவர்.

இவர் இயற்கை முறையில் விவசாயப் பண்ணையை உருவாக்கி 150க்கும் மேற்பட்ட தமிழனின் பண்டைய கால பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் பணியை செய்து வருகிறார்.

இவரின் சாதனைக்காக பல விருதுகளுக்ளு வழங்கபட்டுள்ளது. இந்நிலையில், அய்யா நெல் ஜெயராமன் அவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கல்லீரலில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 19 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்றுவரை தொடர் சிகிச்சை பெற்றுவரும் அவரை காண அப்பல்லோ மருத்துவ மனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் சரியாகி இந்த தமிழ் மண்ணிற்கு அவரின் பணி தொடங்க, தமிழகம் முழுவதும் பலரும் அவருக்காக இறைவனிடம் பிராத்தனை செய்து வருகின்றனர்.

அய்யா நெல் ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட செய்தி அறிந்து, அவரின் முழு மருத்துவ செலவையும் நடிகர் சிவர்த்திகேயேன் ஏற்றுக்கொன்றார். மேலும் அவரின் மகன் படிப்பு செலவையும் நடிகர் சிவகார்த்திகேயனே ஏற்றுக்கொண்டார்.

மேலும், நடிகர் சத்தியராஜ், நடிகர் கார்த்தி, நடிகர் சிவர்த்திகேயன், நடிகர் சூரி, கத்துக்குட்டி இயக்குநர் இரா.சரவணன், நாம் தமிழர் கட்சி சீமான், த.மா.க. வாசன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

டிஜிபி. ராசேந்திரன் அவர்களும் நெல் ஜெயராமனை நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, ”உங்களுக்கு விரைவில் குணமாகும் கவலை கொள்ளாதீர்கள். என் பணியின் ஓய்வுக்கு பின் நானும் முழுக்க., முழுக்க., இயற்கை முறையில் பாரம்பரிய விவசாயம் செய்வேன்” என்று வாக்குறுதியை அளித்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும், நெல் ஜெயராமனை தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, துரைக்கண்ணு ஆகியோர் நேரில் சென்று உடல்நலம் விசாரித்துள்ளனர்.