பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவரை நீக்க வேண்டும் என்றால் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே நீக்க முடியும் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேறகண்டவாறு கூறியுள்ளார்.
பிரதமரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும் ஜனாதிபதியே நியமிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.