சொந்த மகளை ஏலத்தில் விட்ட தந்தை!

தெற்கு சூடானில் 17 வயது மகளை தந்தை திருமணத்திற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெற்கு சூடானில் பெரும்பாலும் Dinka என்ற கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதாவது பெற்றோர் தங்கள் பெண்களை ஏலத்தில் விடுவார்களாம், அதில் இறுதியாக யார் அதிகமாக பொருட்களோ, பணமோ கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண் திருமணம் செய்து வைக்கப்படும்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய 17 வயது மகளை அங்கிருக்கும் தந்தை ஒருவர் ஏலத்தில் விட்டுள்ளார். இந்த ஏலத்தில் 6 பேர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தொழிலதிபர் ஒருவர் 500 மாடு, 3 விலையுயர்ந்த கார்கள் மற்றும் 1 மில்லியன் உள்ளூர் மதிப்பிலான பணம் கொடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்ய ஏலத்தில் எடுத்துள்ளார்.

இவர்களின் திருமணம் கடந்த 9-ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் இந்த பெண் ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்டவள் என்று குறித்து அந்த பெண்ணின் வயதை குறிப்பிட்டுள்ளனர், இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

17 வயது பெண்ணை திருமணம் செய்து வைப்பதே தவறு, அதில் இதை பேஸ்புக் பக்கத்தில் போடுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் அந்த புகைப்படத்தை நீக்கியதாக கூறப்படுகிறது.

தெற்கு சூடானில் பெண்களின் திருமண வயது 18 தான், ஆனால் நாட்டின் பஞ்சம் போன்றவைகள் காரணமாக 50 சதவீத பெண்கள் தங்களுடைய 18-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானலும், அவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.