தினமும் உல்லாசமாக இருக்க அழைத்த கணவன், மனைவி எடுத்த அதிரடி முடிவு.!

தனது கணவன் அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால், ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மாந்தோப்பு கிராமத்தில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவர் கூலிதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு திருமணமான இரு மகள்கள், திருமண வயதில் 2 மகள்கள் என 4 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் வீரபத்திரன் தினமும் மகாலட்சுமியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். மேலும் நேற்று இரவும் தனது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு மகாலட்சுமி மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீரபத்திரன் தூங்கி கொண்டிருந்தபோது மகாலெட்சுமி அவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி, தீ வைத்து எரித்து கொன்றுள்ளார்.

பின்னர் எறிந்த நிலையில் உள்ள சடலத்தை அருகில் உள்ள தோட்டத்தில் வீசியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது மகாலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தீவிரமாக விசாரித்ததில் உல்லாசத்துக்கு அழைத்ததால் கணவனை, எரித்து கொன்றதை வாக்குமூலமாக அளித்துள்ளார்.பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.