பிரான்சில் தற்கொலைக்கு எதிராக போராடிய காவற்துறை வீராங்கனை தற்கொலை செய்து கொண்டதால், இந்த சம்பவம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் கடந்த சில வருடங்களாகவே தற்கொலை அதிகரித்து வருகிறது.
இதனால் இதற்கு ஒரு தீர்வை உருவாக்கும் விதமாக காவற்துறையினரின் குற்றத்தடுப்புப் பிரிவினைச் சேர்ந்த காவற்துறை வீராங்கனை Maggy Biskupski என்ற 36 வயது பெண் Mobilisation des policiers en colère எனும் ஒரு அமைப்பினை ஆரம்பித்தார்.
2016-ஆம் ஆண்டு Grande-Borne (Viry-Châtillon et Grigny)-ல் காவற்துறையினரைக் கொழுத்தியதையடுத்துக் காவற்துறையினர் போராட்டம் நடாத்தியபோதே அவர்களிற்கான இந்த அமைப்பை இவர் ஆரம்பித்தார்.
இதில் தீவிரமாக இயங்கி வந்த இவர், நேற்றிரவு, Carrières-sous-Poissy (Yvelines) இல் இருக்கும் தன்னுடைய வீட்டில் தனது சேவைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதால், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.