இன்று மாலை கஜா புயலின் ஆட்டம் ஆரம்பம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்க கடலில் உருவாகிய, கஜா புயல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தை நோக்கி 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த புயலானது வரும் நவம்பர் 15ஆம் தேதி கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கே 790கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே 690கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி 12கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுசேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் 15-ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை இருக்கும்.