திருமணம் செய்வதாக கூறி இளைஞர் செய்த சேட்டை.! தலையில் அடித்து கதறியழும் பெண்.!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகேயுள்ள எஸ்.மாங்காடு பகுதியை சார்ந்தவர் சுஜித் (30). கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்ற இவர்., சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆற்றூரை சார்ந்தவர் கவி (28) பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருவதால்., இருவரும் பழகி வந்துள்ளனர். இவர்களின் பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்., சுஜித் தனது காதலியிடம் உன்னை திருமணம் செய்துகொள்வதாகவும்., ஆசைக்கு இணங்கக்கூறி அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த பெண்ணும் சுஜித் திருமணம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அவரின் ஆசைக்கு இணங்கியுள்ளார்.

இதனையடுத்து தனது காதலியுடன் சென்னை., வேளாங்கண்ணி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் சுற்றுலா செல்வது போல சுற்றித்திரிந்து., அந்த பெண்ணை ஆசைக்கு இணங்கவைத்து கட்டாயப்படுத்தியுள்ளார்.

பின்னர் அந்த பெண் தன்னை திருமணம் செய்யக்கூறி அவரிடம் முறையிடவே., ரூ.15 இலட்சம் ரொக்கம்., 150 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 இலட்சம் வங்கிக்கணக்கில் செலுத்தும் பட்சத்தில் திருமணம் செய்துகொள்வதாகவும்., இல்லையெனில் இருவரின் அந்தரங்க காட்சிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சுஜித் மீது கற்பழிப்பு மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் போன்ற 5 சட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விசயத்தை அறிந்த சுஜித் தலைமறைவாகிவிட்டதால்., அவரை தீவிரமாக காவல் துறையினர் தேடி வருகின்றனர்.