மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுவப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா சிலை திறக்கப்பட்ட நிலையில், அது ஜெயலலிதாவின் முக அமைப்பை போல இல்லை என்ற சர்ச்சை எழுந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மனைவின் சிலையை தான், ஜெயலலிதா சிலை என்று கூறி வைத்துள்ளதாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் விரைவில் சிலை மாற்றி அமைக்கப்படும் என்றும், தற்போதைய சிலை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய சிலை வைக்கப்படும் என்றும் பேட்டியளித்து இருந்தார்.
இந்த நிலையில் இவ்வளவு மாதங்கள் கழித்து தற்பொழுது ஜெயலலிதாவின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை ஏழு அடி உயரத்தில் வெண்கலத்தால் ஆன படி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை இன்று காலை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளனர்.
காலை 9.30 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.