தஞ்சாவூர் மாவட்டத்தில், தந்தையை இழந்து, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் ஒருவர் துணி கடையில் பணியாற்றி வந்துள்ளார்.
அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் கடை உரிமையாளரின் நண்பனான சின்னப்பா என்பவர் அந்த இளம்பெண்ணிடம் ஆறுதலாக பேசி தந்தை ஸ்தானத்தில் பழகி வந்துள்ளார்.
இளம் பெண்ணும், அப்பா வயதுடையவர் என நினைத்து, மரியாதையுடன் பழகியுள்ளார். இந்நிலையில், தீபாவளி முடிந்து மறுநாள் தனது வீட்டுக்கு வருமாறு அந்த இளம்பெண்ணை அழைத்துள்ளார் சின்னப்பா.
இளம்பெண்ணும் அவரின் அழைப்பை ஏற்று, சின்னப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த அந்த இளம்பெனிடம் சின்னப்பா குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்துள்ளார்.
அதனை குடித்ததும் மயங்கிய இளம்பெண்ணை சின்னப்பா மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அனால் சில மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த இளம்பெண்ணுக்கு நடந்தது என்னவென்றே தெரியவில்லை உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளது.
வீட்டுக்கு வந்தபோது உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் பரிசோதித்ததில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சின்னப்பாவை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலைய பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சின்னப்பாவுடன் தொடர்புடைய மற்றவர்களையும் உடனடியாக கைது செய்யக்கோரி, பெண்ணின் உறவினர்கள், மாதர் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.