- சீலா மீன் துண்டுகள் – 8
- சின்ன வெங்காயம் – 8
- தக்காளி – 2
- தேங்காய்ப்பூ – 3 மேசைக்கரண்டி
- புளி – சிறிதளவு
- வத்தல்தூள் – 1 மேசைக்கரண்டி
- மசாலாத் தூள் – 1/2 தேக்கரண்டி
- இஞ்சி – சிறிய துண்டு
- பூண்டு – 5 பெரிய பற்கள்
- சோம்பு – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- கடுகு – சிறிதளவு
- வெந்தயம் – சிறிதளவு
- நச்சீரகம் – சிறிதளவு
- வற்றல் – 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
- முதலில் சோம்பு, இஞ்சி, பூண்டு, சிறிதளவு வெங்காயம் முதலியவற்றை மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும்.
- தக்காளி, தேங்காய்ப்பூ, புளி, வற்றல் தூள், மசாலா தூள் முதலியவற்றை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து தனியே வைக்கவும்.
- சிறிதளவு தக்காளியை நறுக்கி தனியே வைக்கவும் .
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, நச்சீரகம், விதை நீக்கிய வற்றல் , வெந்தயம், சிறிதளவு வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்த இஞ்சி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இப்போது மீனை தாளிப்பில் போட்டு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்து மூடி போட்டு அரைத்த மசாலா வாடை மீனில் சேரும்வரை 3 நிமிடங்கள் வேக விடவும்.
- மீதி இருக்கும் வெங்காயத்தையும், சிறிதளவு தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
- பின் அரைத்த தக்காளி விழுதை மீனில் சேர்த்து புளி வாசனை போகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- மீனுடன் மசாலா அனைத்தும் நன்றாக சேர்ந்து வெந்து மணம் வந்ததும் இறக்கி விடவும்.