ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை? ஆதாரத்தை வெளியிட்ட சசிகலா தரப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்.பி உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அம்மாவை வீட்டுக்குள்ளே வைத்து, அம்மாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து டிடிவி தினகரன் தரப்பினர் கொன்று விட்டார்கள். என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ”இவர்களின் உண்மை முகத்தை தெரிந்துக்கொண்டு அ.தி.மு.க தொண்டர்கள் அவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் . ஜெயலலிதாவின் சொத்துக்களை கொள்ளையடித்த சசிகலா கும்பல், தற்போது நல்லவர்களைப் போல நாடகமாடுகிறார்கள்.

நமக்கு தலையாட்டியவர்கள் இன்று சிறப்பாக ஆட்சி செய்றாங்களே என்று ஆத்திரப்படுகிறார்கள். இந்த ஆட்சியை நடக்கவிட்டால் அவர்களுக்கு ஆபத்து என நினைத்து பல சதிகளை செய்கின்றனர். தற்போது நடக்கும் சிறப்பான ஆட்சியைக் கலைப்பதற்கு மு.க.ஸ்டாலினுடன் தினகரன் இணைந்துள்ளார்” என்று பேசி இருந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பில் சிறப்பு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, தினகரன் தரப்பினரே கொலை செய்துவிட்டனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா வெங்கட்ராமன், நுரையீரல் சிகிச்சை நிபுணர் நரசிம்மன் உள்ளிட்டோர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆகியோர் குறுக்கு விசாரணைக்காக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதற்கிடையே செய்தியூயாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் அளிக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.