பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கி விட்டோம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் மஹிந்த தோல்வியை அடைந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட லஷ்மன் கிரிஎல்ல அதனை உறுதி செய்தார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு யார் எதிர்ப்பு என சபாநாயகர் உறுப்பினர்களிடம் கேட்டுள்ளார்.எனினும், ஒருவரும் தான் எதிர்ப்பு என கூறவில்லை. எனினும் மஹிந்த தரப்பினரின் சிலர் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.
இதனாலேயே நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானம் மேற்கொண்டார் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால், கடும் கோபம் அடைந்த மஹிந்த நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டள்ளது. மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் அனைவரும் இதற்கு சாட்சியாக திகழ்வார்கள் என தெரிவித்துள்ளார்.ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றபற்பட்டுள்ள நிலையில் மஹிந்த இனி பதவி விலக வேண்டிய அவசியமில்லை, அவர் ஏற்கனவே பதவி விலக்கப்பட்டுள்ளார்.
நீங்கள் அனைவரும் நேரடியாக இதனை பார்த்து விட்டீர்கள் இதனை யாரும் மறைக்க முடியாது.நாட்டில் ஜனநாயகம் வெற்றியடைந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கி விட்டோம் எனவும் இது அதிகாரபூர்வமானது எனவும் சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் புதிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பினை அவர் சற்று முன்னர் விடுத்துள்ளார்.