நாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது.இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.