பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ‘சகா’ வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவு: தற்கொலை செய்ய போவதாக கண்ணீர்விட்டு அழும் இளம் தாய்!!

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் சகாவான அ.வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்யபோவதாக கண்ணீர்விட்டு அழும் இரண்டு பிள்ளைகளின் தாய்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பிரத்தியேக செயலாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகிய வேழன் என்கிற அருணாச்சலம் வேழமாலிகிதன் என்பவர் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்கிற குற்றச்சாட்டு கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த வேழமாலிகிதன் எனப்பவர்  ஏற்கனவே தடுப்பில் இருந்த கணவனை இழந்த பெண்ணொருவர் கணவனின் விடுதலைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கடிதம் தேவை என்பதனால் சிறிதரனிடம் சென்றார் .

சிறிதரன் அந்தப் பெண்ணை தனது செயலாளராக இருந்த வேழமாலிகிதனிடம் அனுப்பினார்.

உதவி கேட்டு வேழமாலிகிதனிடம் சென்ற பெண்ணை தன்னுடன் படுத்தால் தான் கடிதம் தருவதாகவும் , “ஒரு முறைதானே படுத்து விட்டுப் போ … யாருக்கு தெரியப் போகுது ” என மிரட்டியுள்ளான் .

தனது சகோதரர்கள் எல்லோரையும் இழந்து செஞ்சோலையில் வளர்ந்த இந்த சகோதரி தனது காணிப்பிரச்சனை நிமிர்த்தம் உதவி கேட்டுச் சென்ற போது, யாரும் அற்ற அநாதையாக தனது குழந்தைகளுடன் அல்லறும் இந்த சகோதரியிடம் பாலியல் இலஞ்சம் கேட்டது மட்டுமல்லாது உயிர் அச்சுறுத்தல் கொடுத்து மிரட்டியும் உள்ளான்.

வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?