அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா??

2001ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலயே நடத்தப்பட்டது என முன்னான் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2001 கட்டு நாயக்க மீதான புலிகளின் தாக்குதல் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலயே நடத்தப்பட்டது. புலிகள் தலைமை, சில முக்கிய இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு துறைக்குமே தெரிந்த உண்மை இது. இப்படி இருக்க ரணில் விக்ரமசிங்க புலிகளுடன் ஒரு போதும் ஒப்பந்தம் செய்யவில்லை என கூறுகிறார்.” என கருணா பதிவிட்டுள்ளார்.

இலங்கை அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் இன்றும், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூட்டப்பட்ட நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதில் மஹிந்தவுக்கு எதிராகவும் ரணிலுக்கு ஆதரவாகவும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், ரணில் மற்றும் விடுதலைப்புலிகளை தொடர்புபடுத்தி கருணா வெளியிட்டுள்ள பதிவால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.