காதலியை ஏமாற்றி காதலன் செய்த மோசமான செயல்! டிவி நிகழ்ச்சியில் அம்பலம்

அவுஸ்திரேலியாவில் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் காதலன் காதலியை விட்டுச் சென்றதால், அந்த பெண் வேதனையுடன் பேசிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தங்கள் பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு ரியாலிட்டி ஷோ ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த இந்த ரியாலிட்டி ஷோவில் Izzy Vesey-Simon DeBono ஜோடி கலந்து கொண்டனர்.

இதில் காதலியான Izzy Vesey மொடலாகவும், Simon DeBono பார்பராகவும் வேலை செய்து வருகிறார். காதலர்களான இவர்கள் தங்களுக்கு என்று ஒரு சில விதிகள் வைத்துள்ளனர்.

ஓபன் ரிலேசன்ஷிப் அதாவது இருவரும் யார் உடன் வேண்டும் என்றாலும் செல்லலாம், அவர்களுடன் இருக்கலாம். ஆனால் தங்களுடைய முன்னால் காதலர்களிடம் மட்டும் எந்தவித தொடர்பும் வைக்க கூடாது என்று பேசி முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட போது, Simon DeBono தன்னுடைய முன்னாள் காதலியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது Izzy Vesey-க்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நீ என்னை ஏமாற்றிவிட்டாய், எனக்கு தெரியாமல் நீ உன்னுடைய முன்னாள் காதலியிடம் பேசியிருக்காய் என்று கூற, உடனே அவர் நான் உன்னை விட, என் முன்னாள் காதலியை தான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் அந்த பெண், நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூற, அவர் கண்டு கொள்ளமால் சென்றுள்ளார். அதன் பின் அந்த பெண்ணும் பிரிய முடிவு செய்துள்ளார்.

இது குறித்து Izzy Vesey-யின் தாய் கூறுகையில், என் மகள் ஒரு பேயிடம் இருந்து தப்பித்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் அவனிடம் தொடர்ந்து இருக்க ஆசைப்பட்டு பேசினேன், ஆனால் அவன் அப்படி இல்லை, இதற்கு பின்னரும் நான் அவனிடம் பேசமாட்டேன் என்னுடைய வாழ்க்கையை பார்க்க போகிறேன் என்று கூறியுள்ளார்.