பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படாதென அந்த கட்சி அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாரிய குழப்பநிலை ஒன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்க தரப்பு ஆசனங்களை சபாநாயகர் ஒழுங்கு செய்து தருவார் என்று நம்புகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.