கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் சென்றால் இன்று கடலூர், வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயல் காரணமாக தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் அதிகாலையில் வழக்கம்போல் வெளிச்சமாகவே காணப்பட்டது. திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வெளுத்துவாங்குகிறது மழை.
எல்லோரும் சமூகவலைத்தளங்களில் கஜா புயலை விமர்சித்துவந்தநிலையில் சென்னையில் மழை கொட்டி தீர்க்கிறது. அதேபோல் நாகர்கோயிலில் அதிகாலை முதல் மழை பெய்துவருகின்றது.
இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சாலையோரங்களில் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேடவாக்கம், பள்ளிக்கரணை, கிண்டி, வேளச்சேரி, தாம்பரம், அடையாறு போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. திடீரென மழை பெய்ததால் அலுவலகத்திற்கு செல்பவர்களும் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி நிற்கின்றனர்.