சபாநாயகரை கடுமையாக திட்டிய மஹிந்த! நான் தான் எல்லாம் என எச்சரிக்கை

நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் குழப்பத்துடன் ஆரம்பித்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு உரையாற்ற விடாமல் பல தரப்புகள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில் சபாநாயகர் கருஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு பேச அனுமதி வழங்குங்கள் என குறிப்பிட்டார்.

இதனால் கடுப்பாகிய மஹிந்த, தான் பிரதமர், உறுப்பினர், ஜனாதிபதி அல்லது அமைச்சர் என்றாலும் தான் மஹிந்த ராஜபக்ச தான். அதனை யாராலும் தவிர்கக முடியாது. உறுப்பினர் என கூறினாலும், நான் மஹிந்த ராஜபக்ச தான் என கடும் கோபமாக சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நான் அனைத்து துறையிலும் செயற்பட்டேன் என்பதனை சபாநாயகர் முதலில் புரிந்து கொண்டு பேச வேண்டும். அதனை நினைவில் வைத்து கொள்ள கொள்ள வேண்டும் என மஹிந்த குறிப்பிட்டார்.

அதன் பின்னர் தனது உரையை ஆரம்பித்த மஹிந்த உறுதியாக பொது தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட சதி முயற்சி நிரூபணம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமாறு தம்மிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீது கொண்ட நேசத்தினால் தாம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதே தமது கோரிக்கை எனவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

உலக சந்தையில் பெற்றோல் விலை குறைந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் மேலும் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இன்றிரவு மீண்டும் பெற்றோல் விலை குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளப் பிரச்சினை கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமெனவும், மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் கைப்பாவையாக சபாநாயகர் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியே பாரியளவில் அண்மைக் காலத்தில் வெளிநாட்டுக் கடனை பெற்றுக்கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சபாநயாகர் சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் பொதுத் தேர்தல் ஒன்றையே தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.