கோவை அருகே உள்ள போத்தனூரை சேர்ந்தவர் பாபு. இவர் 13 வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த சுமதி என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் விரக்தி அடைந்த சுமதி, பாபுவை பிரிந்து அதே பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் தாய் விசாலாட்சியுடன் வசித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாபு, மாமியார் வீட்டுக்கு சென்று சுமதியையும், விசாலாட்சியையும் சண்டைபோட்டுள்ளார்.
இதனையடுத்து சுமதியிடம் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு பாபு அழைத்தார். அதற்கு சுமதி மறுத்ததுடன் விவாகரத்து கேட்டு வக்கீல் மூலம் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாபு, நேற்று நள்ளிரவு மாமியார் வீட்டுக்கு சென்று மாமியார் வீட்டின் கதவை தட்டியுள்ளார். விசாலாட்சி கதவை திறந்த போது , தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அவர்கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.
தாயை காப்பாத்தவந்த வந்த மனைவி சுமதி கழுத்தையும் அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து aவீட்டுக்குள் சென்று பாபுவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று அதிகாலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமதியின் அண்ணன் பிரகாஷ் வெளியே வந்த போது வீட்டின் வெளியே ரத்தம் சிதறி கிடந்தது. இதனால் பதறி போன அவர் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு விசாலாட்சி, சுமதி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், பாபு தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.