சற்றுமுன் வானிலை மையம் வெளியிட்ட அவசர அறிக்கை!!

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் கடலூர் பாம்பன் இடையே இன்று மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

”கஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக சக்தியுடன், மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் நேற்று இன்னும் தீவிரமாகி இன்று தீவிரப்புயலாக மாறும். ஆனால், தமிழகக் கரையைக் கடக்கும் முன் அதாவது கடலூர் முதல் வேதாரண்யத்துக்கு இடையே கடக்கும் முன் கஜா புயல் வலுவிழக்கக்கூடும் என்று வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வானிலை மையம் சற்றுமுன் வெளிட்ட தகவலின் படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது இன்று மாலை, அல்லது இரவு கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக, மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று இரவு வரைவு மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல் தற்போது மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த புயலானது சென்னை மற்றும் நாகைக்கு சுமார் 370 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த கஜா புயல் இன்னும் 6 மணிநேரத்தில் (இன்று மாலை 4 மணிக்குள்) அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 80 முதல் 100 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு அவசர அறிவிப்பாக கடலுக்கு செல்ல கூடாது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக இன்று காலை முதலே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேப்பாக்கம்., திருவேலிக்கேணி., தாம்பரம்., சேலையூர்., எழும்பூர் மற்றும் போரூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.