திருச்சியை அடுத்துள்ள துவாக்குடியை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மனைவி நல்லம்மாள்.
இந்த தம்பதிக்கு 22 வயதில் நிவேதா என்ற பெண் இருக்கிறார். அவர் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.
வெள்ளைக்கண்ணு இறந்து விட்டநிலையில் திருமண வயதை எட்டிய மகள் நிவேதாவுக்கு அவரது தாய் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.
அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் வந்து நிவேதாவை பெண் பார்த்து விட்டு சென்றுள்ளார். பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் மனது ஒத்துப்போகவே இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
பின்னர் நிவேதாவின் தாயார் மாப்பிள்ளையின் ஜாதகத்தை வாங்கி ஜோசிரியரிடம் காண்பித்தார்.
அவர் மாப்பிள்ளை ஜாதகம் சரியில்லை என்று கூறியுள்ளார். இதை அவர் மகள் நிவேதாவிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் நிவேதா அந்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வதாக உறுதியாக கூறியிருக்கிறார்.
இதனால் தாய், மகள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மனமுடைந்த நிவேதா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணையை வழக்குப்பதிவு செய்து முன்னெடுத்து வருகின்றனர்.