சமாதானம் பேச சென்ற கணவன்., மனைவியின் முடிவால் நேர்ந்த விபரீதம்.!!

சென்னை சைதாப்பேட்டை துரைசாமி தெரு பகுதியை சார்ந்தவர் சௌமியா (வயது 24). கோயம்பேடு பகுதியை சார்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது.

இவர்கள் இருவருக்கும் குடும்பம் நடத்துவது தொடர்பாக, அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட பிரசனையின் காரணமாக கோபமடைந்த சௌமியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

தனது மனைவி கோபம் தீர்ந்தவுடன் வந்துவிடுவார் என்று ஒரு வர காலம் காத்திருந்த கார்த்திக்., தனது மனைவி வராததால் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் சௌமியாவை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அதற்கு சௌமியா வரமறுத்ததால்., மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கடும் ஆத்திரமடைந்த கார்த்திக் சமையலறையில் இருந்த கத்தியின் மூலம் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு கழுத்தை அறுத்தார்.

இதனால் பதறிய சௌமியா கூச்சலிடவே., அக்கம்பக்கத்தினர் பதறியபடி வீட்டிற்குள் வந்தனர். இதனை கண்ட கார்த்திக் தற்கொலை கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.