ரசியா நாட்டில் உள்ள கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுமார் 6.5 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கமானது காம்சாத்கா விரிகுடா பகுதிகளில் கடலுக்கடியில் 76.2 கி.மீ ஆழத்தில் மையம்கொண்டு ஏற்பட்டது.
திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள்., வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுஇடங்களில் இருந்த மக்கள் பதறியடித்த படி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கமானது காம்சாத்கா தீபகற்பத்தில் உள்ள பல இடங்களில் நிலநடுக்கத்தின் தாக்கமானது உணரப்பட்டாலும் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை உயிர்சேதமும் பொருடசேதமும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.