பிரபல நடிகை அகோரியாக மாறிய சம்பவம்.!!

தமிழ் திரையுலகில் “இயற்கை” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகிய நடிகை குட்டி ராதிகா., வர்ணஜாலம் மற்றும் மீசை மாதவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். மேலும் தமிழ்திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளவர்.

இவருக்கும் கர்நாடக தற்போதைய முதலமைச்சரான குமாரசாமிக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக அறிவித்த இவருக்கு ஷாமிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில்., தற்போது வரை இவர் திரையுலகிற்கு வராமல் இருந்த நிலையில் தற்போது., கன்னடம்., தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகும் “பைரவதேவி” திரைப்படத்தில் அகோரியாக நடித்து வருகிறார்.

அந்த அகோரி தோற்றத்தை தற்போது வெளியிட்டிருக்கும் படடக்குழு., படப்பிடிப்பு காசியில் நடைபெற்று வருவதாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த அகோரி கதாபாத்திரத்திக்காக தினமும் சுமார் 4 மணிநேரம் மேக்கப்போட்டு நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துளளது. மேலும் இந்த படமானது திகில் கதையாக இருக்கும் என்றும் தெரிவித்துளளது.