பஞ்ச் டயலாக்குடன் களமிறங்கிய ஹர்பஜன் சிங்!

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஹர்பஜன் சிங் தற்போது டுவிட் ஒன்று செய்துள்ளார் . அதில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் பஞ்ச் டயலாக்கு வைத்து டுவிட் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங், கடந்த ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணிக்காக வாங்கப்பட்டார். அப்போது முதல் சென்னை மற்றும் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பு காரணமாக தமிழில் டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் நெறுங்குவதற்கு முன்னரே, அத்தொடருக்கான வீரர்களின் ஏலம் நடத்தி வருகின்றனர். வீரர்கள் ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்காக வாங்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2 ஆண்டு தடைக்கு பின் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் இந்த ஆண்டு களமிறங்கியது. 2018-ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்திய சென்னை அணியிலேயே தான் தக்க வைக்கப்பட்டுள்ளதை ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார்.