ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1994ஆம் வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே’ பாடலின் தெலுங்கு வடிவம் ‘ஓ செலியா’.
இந்த பாடலை ஒரு கிராமத்து பெண் பாடும் வீடியோ சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. யூ டியூபில் பதிவேற்றப்பட்ட 10 மணி நேரங்களில் 7 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த வீடியோவை ஏ.ஆர். ரஹ்மான் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்து ‘இவர் யாரென்று தெரியவில்லை. அருமையான குரல்’ என்று பாராட்டியுள்ளார்.
அந்த பெண்ணின் பெயர் பேபி என்றும் அவர் ஆந்திர மாநிலம் வடிசலேரு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பேபியின் அற்புதக் குரலால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ் அவருக்கு தனது இசையில் பாட வாய்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.