யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல்யமான ஆண்கள் பாடசாலையொன்றின் அதிபர் ‘வண்ணாத்திப்பூச்சி’ செயற்பாட்டில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரே இந்த பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரல்யமான ஆண்கள் பாடசாலையின் அதிபர் மீதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பாடசாலையின் அதிபரான மத போதகர் தன்னை பாலியல்ரீதியான தன்புறுத்தலுக்குள்ளாக்க முயன்றார் என பாடசாலையின் ஆண் ஆசிரியர் ஒருவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
பாடசாலை பழைய மாணவர் சங்கம், பாடசாலையின் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் குழு ஆகியவற்றிற்கே கடிதம் மூலம் குறித்த குற்றச்சாட்டுக்களை ஆசிரியர் சுமத்தியுள்ளார். இது குறித்து நேற்று பாடசாலையின் ஆசிரியர் குழு கூடி ஆராய்ந்துள்ளது. எனினும், குறிப்பிடும்படியான தீர்மானமெதுவும் நேற்றைய சந்திப்பில் எட்டப்படவில்லை.
அதிபரின் அத்துமீறிய நடவடிக்கைகளிற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வேன் என ஆசிரியரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.